10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனா நாட்டில் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லெஷன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் புணரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஓட்டலின் முற்றத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அங்கு சென்று அதை ஆய்வு செய்தனர். இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, “ஓட்டலின் முற்றத்தில் உள்ள கற்களில் கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் காணப்பட்டன. இந்த கால் தடங்கள் பதியப்பட்டு 10 கோடி வருடங்கள் இருக்கும். இந்த கால் தடங்கள் அழுக்கு அடுக்குகளால் புதைக்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட கால் தடங்கள் சவுரோபாட்ஸ் டைனோசர் வகையை சார்ந்தது” என்று கூறியுள்ளனர்.