கொலம்பியாவில் பழமை வாய்ந்த கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா நாட்டில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களிலிருந்து தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா கடற்படை அதிகாரிகள் 1708 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன் கப்பலில் ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் போது தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தங்க நாணயங்கள் மற்றும் பீரங்கிகள் உள்ள காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் கப்பலை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.