கோவில் கலசம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே ராயபுதுப்பாக்கம் பகுதியில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோபுரத்தில் செம்பு கலசம் இருந்தது. இந்த கலசத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் கோட்டகுப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.