Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழமை வாய்ந்த “மாதேஸ்வரி கற்சிற்பம்” கண்டுபிடிப்பு…. எங்கு தெரியுமா…? ஆய்வாளர்களின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் வனப்பகுதியில் கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் சிங்கார உதயன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தப்பேட்டையில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பத்தை கள ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், பண்ருட்டி இமான், அன்பழகன், முருகன், ராஜமுருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, தனி பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த சிலை 9, 10- ஆம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். இந்த சிலையின் தலைப்பகுதி கரண்டமகுடம், கழுத்தில் ஆபரணங்கள், கைகளில் உடுக்கை, கீழ்கரங்களில் சூலம், குங்கும சிமிழ் ஆகியவற்றை கொண்டு காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |