பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இருப்பதால், தற்போதைய நிலையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்பட இன்னும் சிறிது காலம் ஆகும் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பாக 13 வயதில் 1942ல் பாடல்கள் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர் பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories