Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

பழிக்குப்பழி…! ”இங்கிலாந்துக்கு” மரண அடி கொடுத்த ”இந்தியா”…. மாஸ் வெற்றி …!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. காரணம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் முறையாக ஒரே மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடந்தபோது, அதில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் விளையாடி விட்டு திரும்பிய இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. காரணம் டெஸ்ட் உலக கோப்பை சாம்பியன் ஷிப் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி அதற்கு தகுதி பெறுவது மிகப்பெரிய சிக்கல் என்பது ஏற்படும்.

இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றிலுமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக உருவாக்கியது . சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்திய அணியின் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஒரு சதத்தை விளாசி தன் பங்கிற்கு 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முதுகெலும்பாக இந்த போட்டியில் செயல்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் தொடர்  ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் இருக்கிறது. அடுத்ததாக அகமதாபாத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதி பெற  வாய்ப்பும் உருவாகும் என்பதால் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |