Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பழிக்குப்பழி…! T20ல் ”ஐந்தரை வருட” பகை…! ‘ ‘இந்தியாவை’ திணறடித்து ”பாக்”…. அசால்ட் வெற்றி …!!

20 ஓவர் உலகக்கோப்பை ”சூப்பர் 12” சுற்றில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக  ராகுல் – ரோஹித் களமிறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் ரோஹித் ரன் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேற அணியின் ஸ்கோர் 6ஆக இருக்கும் போது ராகுல் 3ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா பேட்டிங்:

பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 11 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 31 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி கொண்டு இருந்தது. கேப்டன் கோலி – ரிஷப் பண்ட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 53ரன் அடிக்க ரிஷப் பண்ட் 30 பந்தில் 39 ரன் எடுத்து வெளியேறினார்.

பாகிஸ்தான் பௌலிங்:

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரைசதம் அடித்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 13 ரன்னில் வெளியேற விராட் கோலி 49பந்துகளில் 57ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்டிக் பாண்டியாவும் 11 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 20ஓவரை நிறைவு செய்தது.

பாகிஸ்தான் பேட்டிங்:

7 விக்கெட் இழந்த இந்திய அணி 151 ரன் எடுக்க புவனேஷ்குமார்* 5 ரன்னிலும், முகமத் சமி 0 ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும், ஷதாப் கான், ஹாரிஸ் ரவூப் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியா பௌலிங்:

152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி முஹம்மத் ரிஸ்வான் – பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 17.5  ஓவரில் 152ரன் எடுத்தது. முஹம்மத் ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்னும், பாபர் அசாம் 52பந்துகளில் 68 ரன்னும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இன்று அசத்தியுள்ளனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடர்களில் முதல்முறையாக இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.

Categories

Tech |