Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழிக்கு பழியாக நடந்ததா…? மாணவன் ஏற்பட்ட விபரீதம்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நீராவி-கரிசல்குளம் கிராமத்தில் அஜித்குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அஜித்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த அஜித்குமார் மயக்கமடைந்து அங்கேயே உயிரிக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த இளைஞனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜித்குமாரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இளைஞரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தை முனியசாமி ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கியில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். எனவே அந்த கொலைக்கு பழிக்கு பழியாக அஜித்குமார் கொலை செய்யபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவான மர்ம கும்பலையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |