Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழிக்கு பழி” உடல் ஒருபக்கம்…. தலை ஒருபக்கம்…. நெல்லையில் வெறிச்செயல்…!!!

நெல்லையை அடுத்து உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் இரு வெவ்வேறு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல்நடைபெற்றுள்ளது .இந்நிலையில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் சம்பவத்தன்று கிழச்செவல் நயினார் குளத்தை  சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் தலை துண்டிக்கப்பட்ட  நிலையில்  சடலமாக  கிடந்துள்ளார் . அவரது தலை மற்றோரு பகுதியில் இருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது .

இந்த கொலை சம்பவமானது கடந்த 2014 ஆம் வருடம் அரசு பஸ்சில் சென்ற போது ஒரு கும்பலால் மந்திரம் என்பவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு  பழிவாங்கும் விதமாக  நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம்  தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று அதே பகுதியில் குளத்தாங்கரையில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்  கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுக்குறித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல் நிலையத்துக்கு  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோப்பநாயை வைத்து சோதனை செய்ததில் கோபாலசமுத்திரத்தை  சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மாரியப்பன்  கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரியப்பனின் தலையை தேடிவந்த நிலையில்  சங்கர சுப்பிரமணியன் உடல் கிடந்த அதே  இடத்தில் மாரியப்பன் தலை கிடந்ததுள்ளது.

எனவே இந்த கொலை சங்கரசுப்ரமணியனின் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்து இருக்கலாம் என்று  காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

Categories

Tech |