கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை கடைபிடித்தாரோ ஸ்டாலின் அதை விட ஒரு படி மேலாக நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.நேற்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஆளத் தெரியாத முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று திமுக அரசு தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போட்டு சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம் என்றும் நினைக்கிறது என்று பேசியுள்ளார்.