மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்காவ் என்ற நகரத்துக்கு அருகில் உள்ள லவோல் என்ற கிராமத்தில் சமீபகாலமாக அங்குள்ள குரங்குகள் அடிக்கடி அந்த கிராமத்தில் உள்ள நாய்களை தூக்கிச் சென்று உயரமான பகுதியில் இருந்து கீழே தூக்கிப் போட்டு கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், மேலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட நாய்களை குரங்குகள் அனைத்தும் சேர்ந்து கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 250 நாய்க்குட்டிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 2 குரங்குகள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் உலக அளவில் செய்தியானது. மேலும் இந்த சம்பவம் பற்றி பல செய்தி நிறுவனங்கள் விரிவான தகவல்களை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், குரங்குகள் பழிக்கு பழியாக 250 நாய்க்குட்டிகளை கொன்றது என்ற ஆய்வில், திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 நாய்க்குட்டிகள் பட்டினியால் உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் வசிப்பவர்கள் பழிக்குப்பழியாக குரங்குகள் கொலை செய்ததாக தெரிவிக்கின்றனர். இருந்தாலும் விலங்குகளுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. விலங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது அவற்றின் வழக்கம்தான் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் 2 பெரிய குரங்குகள் மற்றும் 1 குட்டி குரங்கு பிரிந்துவிட்டன. பிரிந்து சென்ற குட்டி குரங்கு சில தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்து விட்டது. குட்டி குரங்கு உயிரிழந்தது தெரியாமல் தாய் குரங்கு நாய் குட்டியை தனது குட்டி என நினைத்து எடுத்துச் சென்றது.
இவ்வாறு சென்றபோது உணவின்றி பட்டினியால் நாய்க்குட்டி உயிரிழந்தது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். 250 நாய்க்குட்டிகள் உயிரிழந்ததாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எண்ணிக்கையை தெரிவித்தது யார் என்ற விவரம் மர்மமாகவே இருக்கிறது. இதுபற்றி வனத்துறை சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் தனது குட்டி என நினைத்து குரங்குகள் சுமார் 50 நாய்க்குட்டிகளை தூக்கி சென்றுள்ளது. இது பற்றி எந்த தகவலும் அறியாத அந்த பகுதி மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரையடுத்து 2 குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். அந்தவகையில் குரங்குகள் நாய்க்குட்டிகளை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.