சிறுவனை கொடூரமாக கொலை செய்த பெண்ணுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் கடையில் வேலை பார்த்த பாக்கியராணி என்பவர் பணத்தை திருடியதாக கூறி வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். இதனால் பாக்கியராணி கடந்த 2016-ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த லட்சுமி பிரபாவின் 3 வயது மகன் சிரீஸை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு பாக்கியராணிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பாக்கியராணி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாக்கியராணிக்கு அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.