ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் வலியுறுத்திய நிலையில், சசிகலா மீது எவ்வித தவறும் இல்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். எந்த காலகட்டத்திலும் எந்தவிதமான தடையும் கிடையாது. சசிகலா அவர்களுடைய சத்திய பிரமாண வாக்கு மூலத்தில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் வரவேற்கிறேன். முழுமையான விசாரணை தேவை, முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்ற அடிப்படையில் அவர் தாக்கல் செய்த 55 பக்கங்கள் கொண்ட சத்தியபிரமான வாக்குமூலம் தான் சாட்சியம்.
அந்த சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற விஷயங்கள் பொய்யானவை, தவறானவை திரித்துக் கூறப்பட்டு இருக்கிறது என்பது போல எந்த ஒரு விஷயமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அறிக்கை என்ன வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் ஒவ்வொரு முறையும் சசிகலாவை சந்திக்கும் போது அன்றன்று நடந்த விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.