Categories
தேசிய செய்திகள்

பழுதாகி நின்ற பஸ்…. ஓடோடி சென்று உதவிய அமைச்சர் அனுராக் தாக்கூர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

ஹிமாச்சலபிரதேசத்தில் இப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சலபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல தலைவர்களும் அங்குதான் முகாமிட்டு இருக்கின்றனர். அதன்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக்தாக்கூரும், அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிலாஸ்பூர் நகரில் நேற்று அவர் பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில் குறுகலான ஒரு சாலையில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கிராமப் பகுதியின் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து பழுதாகி நின்றிருகிறது. இதனிடையில் அந்த பேருந்து முழுதும் பயணிகள் இருந்ததால் சிக்கல் அதிகமாகி இருக்கிறது. அந்த போக்குவரத்து நெரிசலில் அனுராக்தாக்கூரின் காரும் சிக்கியுள்ளது. இதனிடையில் போக்குவரத்தை சீரமைக்க அங்கிருந்தவர்கள் முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் அனுராக்தாக்கூர் அவர்களும் காரிலிருந்து இறங்கி அப்பேருந்தை தள்ளுவதற்கு உதவிசெய்தார். போக்குவரத்து நெரிசல் சீரான பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் அவர் பேருந்தை தள்ளும் வீடியோவை கட்சியினரும், அங்கிருந்த சில பேரும் பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவானது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |