Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற பேருந்து…. அச்சத்தில் மாணவ-மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலாஸ், காட்டேரி வழியாக உட்லண்ட்ஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் குன்னூரில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் வழக்கத்தைவிட அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்து லெவல் கிராசிங் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து அடிப்பகுதியின் பாகம் உடைந்து பழுதாகிவிட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறும் போது, உட்லண்ட்ஸ் பகுதிக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் வீட்டிற்கு செல்ல இரவு நேரம் ஆகிவிடுகிறது. மேலும் குடியிருப்புகள் அடர்ந்த வனப் பகுதிகளை ஒட்டி இருப்பதால் இரவு நேரத்தில் செல்ல பயமாக உள்ளது. எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |