லாரி பழுதாகி நின்றதால் மலை பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லாரி திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பழுதாகி நின்றதால் அவ்வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மெக்கானிக்கை வரவழைத்து இரவு 8 மணி அளவில் லாரியை சரி செய்தனர். இதனையடுத்து லாரி புறப்பட்டு சென்ற பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.