Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழுதை சரி செய்ய சென்ற ஊழியர்…. திடீரென விழுந்த உயர் மின் கோபுர விளக்கு…. விருதுநகரில் பரபரப்பு…!!

உயர் மின் கோபுர விளக்கு விழுந்ததால் ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து திடலில் இருக்கும் உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி உள்ளது. இந்தப் பழுதினை சரி செய்யும் பணியில் மணி நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென உயர் கோபுர மின் விளக்கு தினேஷின் மீது விழுந்தது.

இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |