பாளையங்கோட்டை மாட்டுத்தாவணியில் நடைபெற்ற வாரச்சந்தையில் 24 லட்சத்திற்கு காளைகள், பசுமாடுகள், கன்றுகள் விற்பனை ஆகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் அருகே இருக்கும் பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தையானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்றும் நடைபெற்றது. இந்தச் சந்தையில் ஈரோடு, திருப்பூ,ர் கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து இச்சந்தையில் கலந்து கொண்டார்கள்.
இந்தச் சந்தையில் பல வகையான காளைகள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சந்தையில் நேற்று 92 காங்கயம் இன காளைகள், பசுமாடுகள், 68 நாட்டுப் பசு மாடுகள், காளைகள், கன்றுகள் என கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதில் அதிகபட்சமாக 9 மாத செனையுடன் இரண்டு பல் கொண்ட காங்கயம் இன செவலை பசுமாடு ரூபாய் 65 ஆயிரத்துக்கு விற்பனையானது. மேலும் பலவகையான மாடுகள், காளைகள், கன்றுகள் என ஒரே நாளில் ரூபாய் 24 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.