Categories
பல்சுவை

“பழைய ஆண்டிராய்டு போன்”… எல்லா விபரங்களையும் அழிப்பது எவ்வாறு?…. இதோ முழு விபரம்…..!!!!!

கால் செய்வது அல்லது மெசேஜ் அனுப்புவது என்ற வரையறையோடு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு முடிந்துவிடுவது இல்லை. முக்கியமான போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்ட டேட்டா, கான்டாக்ட்ஸ் ஆகிய இதர முக்கிய தகவல்கள் போனில் சேமிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பழைய ஃபோனிலிருந்து புதிய போனுக்கு மாறுவது சற்று சிக்கல் நிறைந்த காரியமாக இருக்கிறது. அதாவது பழைய போனிலுள்ள டேட்டா அனைத்தையும் புது போனுக்கு மாற்றவேண்டும். மேலும் புது போனில் நமக்கு தேவையான ஆப்களை இன்ஸ்டால் செய்து, ஒவ்வொன்றிலும் லாகின் செய்யவேண்டும். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது டேட்டா டிரான்ஸ்பருக்கு பின் பழைய போனிலுள்ள அனைத்து விபரங்களையும் அழிக்க வேண்டும்.

பேக்டரி ரீசெட் செய்வதால் கிடைக்கும் பலன் என்ன..?

உங்கள் போனை நீங்கள் பேக்டரி ரீசெட் செய்யும் போது அதிலுள்ள அனைத்து பைல்களும் ஒரே மூச்சில் டெலீட் ஆகிவிடும். அதிலும் குறிப்பாக, நீங்கள் லாகின் செய்த ஆப்கள், போட்டோக்கள் மற்றும் உங்கள் மெசேஜ்கள் உள்ளிட்ட அனைத்தும் டெலீட் செய்யப்படும். அதே நேரம் பேக்டரி ரீசெட் செய்வதற்கு முன்பு உங்கள் பழைய போனிலுள்ள டேட்டா அனைத்தும் ஆப்லைன் பேக்அப் எடுத்து வைக்கப்பட்டு உள்ளதா (அல்லது) ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

உங்களின் ஆண்டிராய்டு போனை ரீசெட் செய்வது எவ்வாறு..?

# போனில் செட்டிங்க்ஸ் ஆப் ஓப்பன் செய்து கொள்ள வேண்டும் அல்லது About Phone எனும் டேப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும்

# பேக்டரி ரீசெட் (அல்லது) சிம்பிளி ரீசெட் எனும் ஆப்சன் அங்கிருக்கும்.

# இந்த ஆப்சனில் கடைசியாகவுள்ள எரேஸ் ஆல் டேட்டா எனும் பட்டனை டேப் செய்ய வேண்டும்.

# அதில் வழி முறைகளை படித்துவிட்டு அனைத்து டேட்டாவை அழிக்க அக்ரீ என கிளிக் செய்ய வேண்டும்.

# தற்போது உங்களின் போனின் அன்லாக் கோடு (அல்லது) பின்கோடு (அல்லது) பாஸ்கோடு என ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்யவும்.

# ஸ்கிரீனில் தென்படும் வார்னிங் மெசேஜை படித்து எரேஸ் ஆல் டேட்டா என்று கொடுக்க வேண்டும். தற்போது எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.

Categories

Tech |