Categories
Tech டெக்னாலஜி

பழைய இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

நீங்கள் இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுக்க விரும்பினால் இதற்காக நீங்கள் நேரடியாக ஆப் செல்லாமல் முதலாவதாக பிரவுசரிலிருந்து Instagram இணைப்பை திறக்கவும். இதையடுத்து நீக்கப்பட்ட சாட்களை பெற விரும்பும் கணக்கில் லாகின் செய்யவும். அதன்பின் நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரோபைலைத் திறக்க வேண்டும். இந்த ப்ரோபைலை திறந்ததும் நீங்கள் முதலில் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி விருப்பத்தைப் பார்வையிட முடியும்.

ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி என்ற விருப்பத்தை கிளிக் செய்ததும் உங்களுக்கு பல்வேறு விருப்பங்கள் கிடைக்கும். இதில் டேட்டா டவுன்லோட் விருப்பத்தை பெறுவீர்கள். இந்த விருப்பத்தைத் திறந்ததும், ரிக்வெஸ்ட் டேட்டா விருப்பத்தைப் காண்பீர்கள். பிறகு டேட்டா கோப்புகள் பெற விரும்பக்கூடிய ஜிமெயில் ஐடியை இங்கே குறிப்பிடவேண்டும். தற்போது நீங்கள் இந்த Instagram கணக்கின் பாஸ்வேர்டை நிரப்ப வேண்டும். அத்துடன் உங்களது ரிக்வெஸ்ட் புரோசஸ் செய்யப்படும். இந்த டேட்டா 14 தினங்களில் உங்களது ஜிமெயில் ஐடியில் அனுப்பப்படும்..

Categories

Tech |