Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பழைய இரும்பு கடையில்… பள்ளி பாட புத்தகங்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்களை இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் பழைய இரும்புக் கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அக்கடையில் பதுக்கி வைத்திருந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான சுமார் 5000-கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை கண்டுபிடித்தனர். உடனடியாக இத்தகவலை மயிலாடுதுறை போலீசாருக்கு வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி கிடப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகக் கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவருக்கும் இச்சம்பவத்தில் தொடர்புள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

எனவே போலீசார் இவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகம் பதுக்கி வைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |