Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பழைய இரும்பு வழங்குவதாக கூறி 1 கோடி மோசடி”…. போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை….!!!!!

பழைய இரும்பு வழங்குவதாகக் கூறி ஒரு கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் வசித்து வரும் குமரேசன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சீனிவாசன் பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் உள்ளிட்டோரிடமிருந்து ஒரு கிலோ ரூபாய் 21 வீதம் மொத்தம் 4 ஆயிரம் டன் பழைய இரும்பு பெற்றுக்கொள்வதாக சென்ற 2020 வருடம் பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வைப்புத் தொகையாக ஒரு கோடியும் மீதமுள்ள 2 கோடிக்கு நாளொன்றுக்கு 300 டன் வீதம் பழைய இரும்பு பெற்றுக்கொள்வதற்கு இருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி கொடுக்காமல் நாளொன்றுக்கு 20 முதல் 30 டன் வரை மட்டுமே பழைய இரும்பை கொடுத்திருக்கின்றனர். 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 21 தேதி வரை 840 பழைய இரும்பு மட்டுமே கொடுத்துள்ளனர். 3160 டன் இரும்பை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.

இது பற்றிக் கேட்டாலும் சரியாக பதில் கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த ஒரு கோடி பணத்தையும் குமரேசனிடம் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்திருக்கின்றனர். இதனால் குமரேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் சீனிவாசன் மற்றும் பிரசாந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |