பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வலியுறுத்தி மூத்த குடிமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் சக்திவேல், பொருளாளர் தங்க வீரமணி, செயலாளர் ராசமுத்து, மாநில துணைத்தலைவர் ராமு சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு குடும்ப பாதுகாப்பு நிதியை 1 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.