Categories
அரசியல்

பழைய ஓய்வூதிய திட்டம்: “குரல் கொடுக்கும் கூட்டணி கட்சி…!! வலுக்கும் கோரிக்கை…!!”

திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இதுகுறித்து முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., “அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் அல்லலுக்கு உள்ளாகியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்தது.

இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இந்த ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை ஓய்வூதியம் மருத்துவ காப்பீடு முதலிய எதுவும் ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது. இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சேர்ந்து கையெழுத்திட்டு வருகிற 25-ஆம் தேதி முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் விரைந்து நடைமுறைப்படுத்த ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |