Categories
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்…. தமிழக முதல்வரின் முடிவு என்ன….? ஜார்கண்ட் முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!!!!

அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிகவும் முக்கியமான ஓன்று பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகும். தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இலக்குகள் அதிகம் எனவும் கூறப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்ற காரணத்தினால் இதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளது.

மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது எனவும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதியமைச்சர் பின் வாங்கியுள்ளார். மேலும் பழைய பென்ஷன் திட்டத்தை தற்போது மற்ற மாநிலங்களில் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. பல்வேறு விஷயங்களிலும் திட்டங்களிலும் இந்தியாவிற்கே முன் மாதிரியாக இருக்கும் தமிழகத்தில் ஏன் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட வில்லை என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து போராட்டமும் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் பழைய திட்டத்தை அமல்படுத்தி உள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ஜார்கண்ட் மாநிலம் இணைந்து இருக்கின்றது.

இது பற்றி அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்வீட் செய்துள்ளார். அதில் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற இப்போது நேரம் வந்துவிட்டது என்றும் ஊழியர்களின் நலனுக்காக பழைய பென்ஷன் திட்டத்தை ஜார்ஜண்ட் மாநிலத்தில் அமல்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி விட்டு தற்போது பேச்சை மாற்றுவதாக சிபிஎஸ் வழிப்புணர்வு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்டாயம் செயல்படுவதாக கூறி ஆட்சிக்கு வந்து விட்டு தற்போது நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மறுப்பது சரியல்ல எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்களித்தார். ஆனால் அவர் சொன்னபடியே தற்போது அமல்படுத்தி விட்டார் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழக முதல்வர் மட்டும் இந்த விஷயத்தில் இன்னும் ஏன் மௌனம் சாதிக்கிறார் என தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அதில் பிரச்சினைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தால் நிதி ரீதியாக பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டுமென அதை அந்தந்த மாநில அரசுகளை சமாளிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |