Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்?…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. அதன்பின் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, அடிப்படை சம்பளம் உயர்வு, வீட்டு வாடகை படி உயர்வு ஆகிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத்தை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டம் அரசு ஊழியர்களுக்கு பலன்களை வழங்கவில்லை என்று கருதினர். இதனால் இதை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் முதல்கட்டமாக ராஜஸ்தான் மாநில அரசானது மறுபடியும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் சமீபத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று பிறமாநிலங்களும் பழைய ஓய்வூதியம் திட்டத்தினை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மாநில அரசை தொடர்ந்து தற்போது மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மத்திய சட்டம் அமைச்சகத்தில் அரசு ஆலோசனை கேட்டுள்ளது. ஆகவே விரைவில் பழைய ஓய்வூதியம் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய பென்ஷன் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |