Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களின் பணிக் காலம் நிறைவடையும்போது அவர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சென்ற 2004ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்றி இருக்கிறது. இப்போது ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படாமல் மொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இத்தொகையுடன் அரசு சார்பாகவும் கூடுதல் தொகை செலுத்தப்படுகிறது. அவ்வாறு PF கணக்கில் சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் முடியும்போது மொத்தமாக வழங்கப்படும் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியரின் மரணத்திற்கு பின் குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய பலன்கள் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கமும், ஆசிரியர் சங்கமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அதனைதொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நிதிநிலை அறிக்கையில் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இத்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |