தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதிய பலன்கள் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாததால் அரசு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியரின் மூலமாக தமிழக முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.