அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை தலைவர் பாரதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட மாணவர்களின் தேர்வு கட்டணத்தை கண்டித்தும், பழைய தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் பாரதி செல்வம், நிர்வாகி கோபி சந்துரு, அபிமன்யூ, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.