பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியன் நடிப்பில் வெளியான பூல் புலையா 2 திரைப்படம் 230 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை க்யாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தை டி சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் தயாரித்துள்ளார். இந்நிலையில் பூஷன் மற்றும் நடிகர் கார்த்திக் ஆரியன் கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், தற்போது பூல் புலையா 2 திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் பூஷன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதனையடுத்து பூஷன் மற்றும் நடிகர் கார்த்திக் ஆர்யன் அடுத்ததாக ஷேஜடா என்ற படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இந்தப் படத்தில் கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடிக்கிறார். இவரிடம் பூல் புலையா 2 படத்தின் வெற்றி குறித்து கேட்டபோது, கார்த்திக் மிக உயரமான இடத்திற்கு சென்று விட்டார் என்று கூறினார். அதன்பிறகு கார்த்திக் பழைய கார்த்திக்காக இருக்கிறாரா என்ற கேள்விக்கு, பூல் புலையா 2 படத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோன்று தான் இப்பவும் இருக்கிறார் என்று பதில் அளித்தார். மேலும் பூல் புலையா 2 படத்தின் வெற்றிக்காக நடிகர் கார்த்திக்குக்கு பூஷன் 4.7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு காரை பரிசாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.