Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பழைய திட்டத்தின் படி ஓய்வூதியம்…. பல கோரிக்கைகள் முன்னிறுத்தி…. வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பாக  ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் வள்ளிதேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்த்தநாரி உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலக உதவியாளர் மற்றும் வருவாய் மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வு வழங்க தாமதிக்காமல் அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |