இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் இணையதளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை விற்பனை செய்து பல லட்சங்கள் சம்பாதிக்கிறார்கள். அதாவது ஒரு ரூபாய் நாணயத்திற்கு கூட ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கிறது எனக்கூறி நாணயங்கள் மற்றும் நோட்டுகளும் பல ஆயிரங்களுக்கு பல லட்சங்களுக்கு விலை போகின்றன.அப்படி நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ஓட்டுகளை விற்பதற்கு அல்லது வாங்குவதற்கு தயாராக இருந்தால் உங்களுக்கான முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்கு சில மோசடி கொம்பல் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் இது போன்ற செய்திகளை நம்பி இருந்தால் முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதற்கான கட்டணம் அல்லது வரி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதில் ரிசர்வ் வங்கிக்கு சம்பந்தமில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற போலியான மற்றும் மோசரியான வலைத்தளங்களில் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.