Categories
சினிமா தமிழ் சினிமா

பழைய நியாபகம் வந்திருச்சுசோ….! திரிஷாவோடு சித்தார்த் செய்த காரியம்…. வைரலாகும் வீடியோ…. கேள்வி கேட்கும் ரசிகர்கள்….!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா குந்தவையாக நடித்து வருகிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் நடிப்பை விரைவில் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக நடிகை திரிஷாவும் நடிகர் சித்தார்த்தும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல் மேடையில் இசைக்கப்பட்டது. அப்போது இந்த பாடல் மேடையிள் இசைக்கபட்டவுடன் பழைய நினைவுகளோடு திரும்பிய த்ரிஷா மற்றும் சித்தார்த் அந்த பாடலுக்கு ஏற்றவாறு தங்களுடைய இருக்கையில் அமர்ந்தவாறு ஆடுகின்றனர். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |