epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் உள்ள இருப்பை புதிய நிறுவனத்தின் பி எப் கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.
மேலும் பழைய பிஎஃப் இருப்பை புதிய கணக்கிற்கு மாற்ற யு ஏ என் மற்றும் பாஸ்வேர்ட் அவசியமாகும். இதனுடன் வங்கிக் கணக்கு எண் மொபைல் எண் ஆதார் எண் போன்ற அனைத்து வகையான தகவல்களும் உங்கள் யு ஏ என் எண்ணில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தற்போது பிஎப் இருப்பை மாற்றுவதற்கான செயல் முறையை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
- முதலில் பிஎப் ஒயின் அதிகாரப்பூர் தளமானhttps://unifiedportal-men.epfindia.gov.in/memberinterface/க்கு செல்ல வேண்டும்.
- யு ஏ என் மற்றும் பாஸ்வேர்ட் மற்றும் கேப்சாவை உள்ளீடு லாகின் செய்ய வேண்டும்.
- உள்ளே நுழைந்த பின் முகப்பு பக்கத்தில் மெம்பெர்ஸ் ப்ரொபைல்ஸ் பக்கத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை இங்கே சரி பார்த்துக் கொள்ளவும்.
- பெயர் ஆதார் விவரங்கள் பான் கார்டு மின்னஞ்சல் ஐடி மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
- பிஎஃப் மாற்றுவதற்கு முன் பாஸ்புக்கை சரிபார்க்க வேண்டும் இதற்கு பிஎப் பாஸ்புக் என்று ஆப்ஷன் தோன்றும் அதில் வியூ என்பதற்கு செல்ல வேண்டும்
- பாஸ்புக்கில் கிளிக் செய்த பின் நீங்கள் மீண்டும் ஒருமுறை லாகின் செய்ய வேண்டும்.
- உள்ளே நுழைந்த பின் உறுப்பினர்கள் ஐடியை கிளிக் செய்தவுடன் முழுமையான பட்டியல் திறக்கும் இதில் நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களின் உறுப்பினர் ஐடிகளும் இருக்கும் பாஸ்புக்கை பார்ப்பதன் மூலமாக உங்கள் எல்லா நிறுவனங்களிலும் இருப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.
- பழைய பிஎப் ஐ மாற்றுவதற்கு முன்னால் உங்கள் பழைய நிறுவனம் உங்கள் நுழைவு தேதி மற்றும் வெளியேறும் தேதி அப்டேட் செய்துள்ளதை என்பதை சரி பார்க்கவும்.
- இதற்கு நீங்கள் வியூ என்பதற்கு சென்று சர்வீஸ் ஹிஸ்டரி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பழைய நிறுவனம் தேதிகளை அப்டேட் செய்திருந்தால் பிஎப் ஐ எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
- ஆன்லைன் சேவைகளுக்கு சென்று ஒன் மெம்பர் ஆப் இ பி எப் கணக்கு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- தற்போது திரையில் தோன்றும் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் இருக்கும் ஏற்கனவே உள்ள நிறுவனத்தின் பிஎஃப் கணக்கின் விவரங்கள் கிடைக்கும்.
- அதற்கு கீழே பிஎப் மாற்ற வேண்டிய பழைய முதலாளியின் விவரங்கள் இருக்கும் நீங்கள் மாற்றப் போகும் பிஎப் உங்களின் தற்போதைய அல்லது பழைய முதலாளியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- இப்போது உங்களது யுஏஎன் விவரங்களை உள்ளிட வேண்டும் அதன் பின் இதுவரை நீங்கள் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களின் பிஎப் ஐடிகள் வரும் அதில் யாருடைய பணத்தை மாற்ற விரும்புகின்றீர்களோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதன் பின் GET OTP என்பதை கிளிக் செய்து ஓடிபி பெற வேண்டும்.
- செயல்முறை வெற்றியடைந்த உடன் ஒரு பிரிண்ட் எடுத்து உங்கள் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும் அது பிஎப் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
- உங்கள் பழைய பிஎப் இருப்பு ஏழு முதல் 30 நாட்களில் புதிய கணக்கிற்கு மாற்றப்படுகிறது.