இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்குஏற்பட்ட மோதலினால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை உலகநாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது. அதோடு சீனா செய்து வரும் அத்துமீறல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்றும் இந்தியாவிற்கு உதவியாக தங்கள் படைகளை அனுப்புவோம் என்று வெளிப்படையாக கூறியிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை ஒன்று வெளியானது. அதில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதலை தீவிரமாக நாங்கள் கண்காணித்து வருகின்றோம். இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டையும் தொடர்ந்து விசாரித்தோம். பேச்சுவார்த்தைகளின் நிலைகளையும் கவனித்து வருகின்றோம். இரண்டு நாடுகளுமே பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். லடாக் எல்லையில் இருக்கும் பிரச்சனை விரைவில் தீர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பமும் கூட.
எல்லையில் பழைய நிலைமை விரைவில் திரும்ப வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றார். உலகம் முழுவதும் சீனா அத்துமீறி வருகின்றது. பிற நாடுகளில் எப்படி சீனா அத்துமீறி வந்ததோ அதே போன்று இந்தியாவிலும் அதன் நடவடிக்கையை மேற்கொள்கின்றது என உறுதியாக நம்புகிறார். இதன் காரணமாக சீனா அதே பட்டர்ன் இந்தியாவிலும் அத்துமீறலை நிகழ்த்துகிறது. இதையே நாங்கள் கவனித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.