Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்பாக அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ரவி, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆரம்பப்பள்ளி மாவட்ட பொருளாளர் சுதா, அரசு ஆரம்ப பள்ளி மாநில துணை தலைவர் ரஹீம், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |