Categories
தேசிய செய்திகள்

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கி சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களிடம் மக்கள் பலரும் ஏமாறி தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். அதிக விலைக்கு வாங்கப்படும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்திக்கொண்டு பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாகவும் அதற்கு பணம் கொடுப்பதாகவும் மோசடி கும்பல் விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |