Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படக்கூடிய மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பழைய வாகனங்கள் அதிக அளவில் மாசுவை ஏற்படுத்துவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. இதையடுத்து வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதில் பழைய வாகனங்களை அழிப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளை கடந்த போக்குவரத்து வாகனங்களையும் 20 ஆண்டுகளை கடந்த தனிநபர் வாகனங்களையும் அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் அவர்களுக்கு சாலை வழியில் 25% வரை சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளை கடந்த தங்களது போக்குவரத்து வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களில் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது இரு சக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் 300 ரூபாயாக உள்ளது. இது 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழைமையான இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் வரை பதிவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதனைப்போலவே கார்களை பதிவு செய்ய 600 ரூபாய் கட்டணம். 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான கார் என்றால் பதிவு கட்டணம் 5 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். பழமையான வாகனங்களுக்கு தர பரிசோதனை செய்வது கட்டாயம். அதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |