நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. டெல்லியில் இது போன்ற வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.