நாடு முழுவதும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் சில பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன்பு அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் பிறப்பிக்கப் படும் போது எட்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு வரி வசூலிக்க படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.