இமானின் முன்னாள் மனைவி மோனிகாவின் ட்விட்டர் பதிவு பற்றி பலரும் பேசி வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை விமர்சனத்துடன் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி மோனிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, டியர் டி.இமான் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 வருடங்கள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன். சென்ற இரண்டு வருடங்களாகவே உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை எனக்கூறி திருமண வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
Thank you Jesus 🙏🤗🥰💃 pic.twitter.com/YhGYiFwseE
— Monicka Richard (@MonickaRichard) January 14, 2022
இந்த நிலையில் சென்ற ஜனவரி மாதம் போட்ட ட்விட்டர் பதிவு பற்றி தற்போது பேசப்பட்டு வருகின்றது. அவர் பதிவிட்டிருந்ததாவது கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பழைய வாழ்க்கை போய்விட்டது. புது வாழ்க்கை துவங்கியிருக்கிறது என கூறியிருந்தார். இந்த நிலையில் இவரின் ட்விட்டர் பதிவுகளை பார்க்கும் ரசிகர்கள் வனிதா விஜயகுமாரின் தைரியம் ஞாபகம் வருவதாக கூறுகின்றனர்.