உலகமே நவீனமயம் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல் செல்போன்கள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களையும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பொருட்களை பெற்று வருகின்றனர். flipkart நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளையும், புது புது வசதிகளையும் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களை விற்கும் தனி சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி இந்த சேவையில் ஆப்பிள், கூகுள், சாம்சங், ரியல்மீ, ரெட்மி ஐபோன்களை வாடிக்கையாளர்கள் விற்கவும், வாங்கவும் முடியும். போன்களுக்கு 12மாத வாரண்டியும் போன்களை 7நாட்களில் திருப்பித்தரும் திட்டமும் உள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட போன்களுக்கு தற்போது தள்ளுபடி சலுகைகளை அளிப்பதாக அறிவித்துள்ளது.