வேலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். அதனைப் போல அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி மணிகண்டன். இவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தொழில் சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் இருந்து சக்திவேல் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கொடுத்த கடனை திரும்ப தரும் படி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணன்,தம்பி இருவரும் பழ வியாபார சக்திவேலை காரில் கடத்திச் சென்று அரும்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்து கொடுத்த கடனை திருப்பி தரும்படி கேட்டனர். அங்கு இருந்த தப்பி வந்த சக்திவேல் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.