நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான வக்கீல் சாப் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
In the hall of justice, he will turn black to white.
New trailer out now!Meet #VakeelSaabOnPrime on April 30. @PawanKalyan #SriramVenu @shrutihaasan @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @MusicThaman @bayviewprojoffl @BoneyKapoor pic.twitter.com/uz0tjoYHAR
— prime video IN (@PrimeVideoIN) April 27, 2021
மேலும் பிங்க் திரைப்படம் கடந்த வருடம் நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் அமேசான் பிரைமில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.