தேர்தலுக்கு வர நடிகர் ரஜினிகாந்துக்கு பயமில்லை என நடிகர் பவர்ஸ்டார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது
நாடாளுமன்றத் தொகுதி தென்சென்னையில் குடியுரிமை தேசிய கட்சி சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார். நேற்று அவர், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல உள்ள தேர்தல் அலுவலகத்தில் வாகன பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் எழுதி அளித்தார.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பவர் ஸ்டார் சீனிவாசன் கூறுகையில்,
பாராளுமன்ற தேர்தலுக்காக பாராளுமன்ற தேர்தலுக்காக மக்களை நேரடியாக சந்திக்கும் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் மக்களையும் கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டி இடுகிறேன் என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டியிருப்பது அவரின் சொந்த கருத்து அரசியலுக்கு வர ரஜினிக்கு பயம் இல்லை ரஜினி நல்ல கருத்துக்களை வெளியிடுகிறார் நான் யாரிடமும் சொல்லாமலேயே அரசியலுக்கு வந்துள்ளேன் ரஜினிகாந்த் விரைவில் வருவார் தமிழக மக்களிடம் சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்று பவர்ஸ்டார் தெரிவித்தார்.