பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவானது..
இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.. பலத்த பாதுகாப்புடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு இந்த வாக்கு எண்ணிக்கையின் போது, பல வாக்குச்சாவடி மையங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மத்திய படை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.. தபால் வாக்குகளை பொருத்த மட்டில் ஆரம்பத்திலிருந்தே மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான வாக்குகளில் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்…
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வெற்றி பெற்றால் மட்டுமே அவர் மேற்கு வங்க முதல்வராக தொடரமுடியும்.. குறிப்பாக அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி தழுவிய மம்தா பானர்ஜி 6 மாத காலத்திற்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும்..
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய தினம் இந்த வாக்கு எண்ணிக்கை என்பது தற்போது சுமுகமாக நடைபெற்று வருகிறது.. தபால் வாக்குகளில் தற்போது மம்தா பானர்ஜி முன்னிலையில் உள்ளார்.