Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைத்தேர்தல்… முன்னிலையில் மம்தா பானர்ஜி… தொண்டர்கள் மகிழ்ச்சி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 34,721 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்..

இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப்  தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பவானிபூர், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய 3  தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் களமிறங்கினார்.

இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.. 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 8 சுற்றுகளின் முடிவில் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 34, 721 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்..

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 7,219 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.. இதனால் கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகி விட்டதாக தான் பார்க்கப்படுகிறது..மற்ற 2 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. ஏற்கனவே மம்தா 2 முறை பவானிபூர் தொகுதியில் வென்றது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |