Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு…. 2 மணி நேரம் போராட்டம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய்(20), ரவிக்குமார்(19), சிரஞ்சீவி(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களும் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு மாணவர் மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர்கள் சதீஷ்குமார், கணேஷ்குமார், சரவணன் ஆகிய 7 பேரும் குண்டுக்கல் துறை பகுதியில் பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 7 பேரும் ஆற்றின் குறுக்கே சாய்ந்த மரத்தின் மீது ஏறி நின்று காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலமும் பரிசல் காரர்களின் உதவியுடனும் ஆற்றில் சிக்கிய 7 பேரையும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |