நாய் சேகர் படப்பிடிப்பின்போது சதீஷ் பவித்ர லட்சுமியை கலாய்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் வெளியான பிரண்ட்ஷிப், அண்ணாத்த ஆகிய படங்களில் சதீஷ் காமெடியனாக நடித்திருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் சதீஷ் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் நாய் சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.
.@Siva_Kartikeyan pesarar nu sonna udane Enna oru aanandham Indha @itspavitralaksh ku 😜😜 @archanakalpathi @Ags_production @agscinemas @KishoreRajkumar #NaaiSekar 🐕 pic.twitter.com/WFHP5pilgj
— Sathish (@actorsathish) November 23, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சதீஷ் நாய் சேகர் படப்பிடிப்பின்போது பவித்ர லட்சுமியை கலாய்த்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சேரில் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருக்கும் பவித்ர லட்சுமியிடம் சதீஷ் ஒரு சிறிய கட்டையை கொடுத்து சிவகார்த்திகேயன் பேசுகிறார் என கூற, பவித்ர லட்சுமி ஏமாறும் இந்த கலகலப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.