தமிழ் திரையுலகில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படமும் தெலுங்கு படமும், ஒரு இந்திப் படமும் இவர் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. இந்நிலையில் ‘பப்ளி பவுன்சர்’ என்ற இந்தி படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படம் ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து தயாராகிறது. இதில் ஒரு சவுரஸ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வைத் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றார்கள். இப்படத்தை மது பண்ட்ராக்கர் டைரக்ட் செய்கிறார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தனது படம் மூன்று மொழிகளில் தயாராவதால் தமன்னா மகிழ்ச்சியில் இருக்கிறார்.